Archive for June, 2012

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்..

சமீபத்தில் ரசித்த பழைய பாடல்…

“அவர்கள்” படத்தில், S.ஜானகியின் கொஞ்சும் குரலில், M.S.விஸ்வநாதனின் மெல்லிசையில், கவியரசரின் கவி ஊற்று பொங்கும் போது தமிழுக்கென்ன தட்டுப்பாடு? கேட்டுக் கேட்டு மனம் கொள்ளை போக வேண்டியது தானே?

காற்றுக்கென்ன வேலி… கடலுக்கென்ன மூடி…

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது…

மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது?

காற்றுக்கென்ன வேலி… கடலுக்கென்ன மூடி…

(கங்கை)

நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று…

நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று…

(நான்)

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு?

காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு?

காற்றுக்கென்ன வேலி… கடலுக்கென்ன மூடி…

(கங்கை)

தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன்

சீர் கொண்டுவா சொந்தமே இன்றுதான் பெண்மை கொன்டேன்

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்

பேசிப் பேசிப் கிள்ளை ஆனேன்

கோவில் விட்டு கோவில் போவேன்

குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்

காற்றுக்கென்ன வேலி… கடலுக்கென்ன மூடி…

(கங்கை)

Leave a Comment